சீன தலைவர் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி !

60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மீண்டும் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என மக்கள் நிதீமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்; பிடிக்கவில்லை என்பதற்காக 'கோ பேக்' எனக்கூறி திருப்பி அனுப்பக்கூடாது. சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை. இந்திய – சீன நாட்டு தலைவர்கள் மக்கள் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவானாலும் அது வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறினார்.