Cine Bits
சைக்கிள் பந்தயம் மீதான ஆர்வம்தான் மகாமுனி படத்தின் வாய்ப்பு – ஆர்யா !
மகாமுனி படத்தில் கார் டிரைவர் மற்றும் கொலையாளி என்று இரு வேடங்களில் நடித்துள்ளேன். எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் உண்டு. சைக்கிள் பந்தயம் மீதான ஆர்வம்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலுவானவர்களாக இருப்பார்கள். மகாமுனி படத்துக்கு அதுமாதிரி ஒரு நடிகர் தேவை என்பதால் இயக்குனர் என்னை தேர்வு செய்தார். அழுத்தமான கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. இதில் ஒரு சிறுவனுக்கு தந்தையாக நடித்து இருக்கிறேன். எனது திருமணத்துக்கு பிறகு இந்த படம் திரைக்கு வருகிறது. திருமணமான பிறகு நான் மாறவில்லை. சக நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.