தனுஷ் அனிருத் இடையே இருந்த மனக்கசப்பை தீர்த்து வாய்த்த ரஜினி !

தனது திறமையை கண்டுபிடித்து  இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ் தான் என்று அனிருத் தெரிவித்திருந்தார். இருவரும் உறவுக்காரர்கள். 3 என்ற படத்தில் தனுஷ், அனிருத் கூட்டணி இணைந்தது. அடுத்தடுத்து சில படங்களில் வெற்றி பாடல்களை தந்தனர். ஒய் திஸ் கொல வெறி என்ற உலக அளவில் பிரபலமான ஹிட் பாடலையும் தந்தனர். திடீரென்று இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும்  காய் விட்டுக்கொண்டு பேசாமல் இருந்தனர். இந்த சண்டை எப்போது தீரும் என்று  குடும்பத்தினர் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் ரஜினிகாதுக்கும் சென்றது. தற்போது அவர்களின் மனக்கசப்பை தீர்த்து வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினி தனது வீட்டில் தன்னுடைய நட்சத்திர பிறந்தநாளை சிறப்பு பூஜை செய்து கொண்டாடினார். அப்போது தனுஷ், அனிருத் பங்கேற்றனர். அவர்கள் இருவரிடமும் பேசி மனக்கசப்பை சரி செய்து வைத்தார் ரஜினி. இதையடுத்து இருவரும் மனம்விட்டு பேசி மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.