Cine Bits
தன் படத்துக்கு டப்பிங் பேச மறுத்த ஆண்ட்ரியா !
மும்பை ராஜேஷ். கமல் போரா இணைந்து தயாரிக்கும் தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் மாளிகை. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்பொழுது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் பற்றி ஆண்ட்ரியா கூறுகையில், இதில் எனக்கு இரண்டு விதமான கதாபாத்திரங்கள் உள்ளன அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு என்னால் டப்பிங் பேச முடியவில்லை. அப்படியொரு வீரியமான கதாபாத்திரம். வேறு யாரையாவது வைத்து பேசிக்கொள்ளும்படி படக்குழுவிடம் கேட்டுக்கொண்டேன். அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்ததற்கு படக்குழுவினர் எனக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இவ்வாறாக ஆண்ட்ரியா கூறினார்.