Cine Bits
தரண்குமார் இசையில் பாடகராக R.J.பாலாஜி !
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, பிரபுதேவாவின் யங் மங் சங், சிபிராஜின் வால்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ‘பப்பி’ படம் மூலம் பாடகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘சோத்துமூட்டை’எனும் பாடலை இவர் பாடியுள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.