திருமணத்துக்கு முன்பை விட திருமணத்துக்கு பிறகுதான் பிசியாயிருக்கிறார் சமந்தா !

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க. அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது. அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது. இதைதொடர்ந்து இவர் தனது கணவருடன் ஸ்பைனில் கோடை விடுமுறையையும் இந்த வெற்றியையும் கொண்டாடி வருகிறார்.