திரைப்படமாகும் சமூக சேவகர் கல்யாண சுந்தரம் வாழ்க்கை

பிரபல சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், கல்வியாளர் சமூக ஆர்வலர் தனக்கு கொடுக்கப்பட்ட 30 கோடியை கல்விக்கு தானமாக கொடுத்தவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த இவரை தந்தையாக தத்தெடுத்து தன் வீட்டில் வைத்து பாதுகாத்தார். ஆனாலும் சுதந்திரமாக இருக்க விரும்பியவர் அங்கிருந்து வந்து விட்டார். தற்போது பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கையை தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் திரை படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளது, பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலம் கல்யாண சுந்தரமாக நடிக்க அமிதாப்பச்சனை அணுகியுள்ளார் தயாரிப்பாளர். இதற்காக அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகம் அமிதாப்பச்சனிடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் ரஜினியை நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. மற்றொரு தயாரிப்பாளர் முகேஷ் சென்னையில் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.