Cine Bits
திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் – தலைவர் பதவிக்கு கே.எஸ். ரவிக்குமார், அமீர் உள்ளிட்டோர் போட்டி
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு இயக்குனர்கள் பி.வாசு , ஜனநாதன், கே. எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வரும் 13ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.