நயன்தாராவை இயக்கவிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி !

ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து முடித்துள்ள நயன்தாரா, அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நயன்தாராவும், ஆர்.ஜே.பாலாஜியும் ஏற்கனவே நானும் ரவுடி தான், வேலைகாரன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.