Cine Bits
படப்பிடிப்பில் விபத்து நடிகர் அருண்விஜய்க்கு காயம் !
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய் நடித்த குற்றம் 23, தடம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர், கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாஃபியா' படத்தில் நடித்துள்ளார். அதில் பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'வேலையில் இருக்கும் போது காயம் பட்டால் எனக்கு வலி தெரியாது. இது நான் நேசித்து ஏற்றுக் கொண்ட பயணம். அத்தனை தழும்புகளும் ஒரு கதை சொல்லும்' என்று குறிப்பிட்டுள்ளார்.