பாலிவுட் செல்கிறார் விஷ்ணுவர்தன் !

அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம், சர்வம் போன்ற படங்களை இயக்கியவர், விஷ்ணுவர்தன். அடுத்து இந்தி படம் இயக்குகிறார். கார்கில் வீரர் விக்ரம் பத்ரா வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட உள்ள இந்த படத்துக்கு, ஷேர்ஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பத்ராவாக, சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இதை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். அடுத்து, அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதத்தில் அவர் பாலிவுட் படம் இயக்க மும்பை சென்றுள்ளார்.