பிக் பாஸ்சிலிருந்து வெளியேறினார் வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் பெரிய டுவிஸ்ட் வைத்து யாருமே எதிர்பார்க்காத ஆளை வெளியேற்றிவிட்டார். பிக் பாஸ் 3 வீட்டிற்கு முதல் ஆளாக வந்த பாத்திமா பாபு முதல் ஆளாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சீனியரான மோகன் வைத்யா தான் இன்று வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் நினைத்தார்கள். மாறாக வனிதா விஜயகுமார் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆந்திரா போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். வனிதாவை கடைசி வரை வைத்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்பட்ட நிலையில் வனிதா வெளியேற்றப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதால் சக போட்டியாளர்களுக்கு இனி நிம்மதி தான். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இனி சண்டை போட யாருமே இருக்க மாட்டார்களே. ஒருவேளை மீரா மிதுநை வைத்து பிரச்சனை கிளம்புவார்கள் பொறுத்திருந்து பாப்போம்.