பிக் பாஸ் சீசன் 3 – சிறப்பு விருந்தினர்களாக செல்லவிருக்கும் மகத், யாஷிகா !
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் முகின் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மற்ற 5 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். விருந்தினராக சென்றுள்ள அவர்கள் ஒருவாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.