Cine Bits
பிரபல காசினோவில் நடனமாட இலங்கை செல்லும் நமீதா!
2002-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நமிதா. பின்னர் 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமீபகாலமாக திரைப்படங்களில் தலைகாட்டாத நமீதா, தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இலங்கை கொழும்புவில் உள்ள பிரபல காசினோவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் நமீதா. அதற்காக அவர் ஸ்ரீலங்கா சென்றுள்ளார்.