Cine Bits
புரூஸ்லீ மறைந்த தினம் !
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரில், 1940 நவ., 27ல் பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக, சினிமாவில் அறிமுகமான இவர், 18 வது வயதில், உயர் கல்வி கற்றார். சீன பாரம்பரியத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தாருடன், சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹாங்காங் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு, குங்பூ கலையில் தேர்ச்சி பெற்றார்.பின், மேற்கத்திய சினிமாவில், சீனாவின் கலாசாரம், குங்பூ கலைகளை பின்பற்றிய படங்களில் நடித்தார். 1971ல் வெளியான, பிக் பாஸ் படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. பிஸ்ட் ஆப் பியூரி, வே ஆப் டிராகன் உள்ளிட்ட பல படங்கள், வசூலில் சாதனை படைத்தன. அமெரிக்கா, ஹாங்காங் நாடுகளில் பிரசித்தி பெற்ற நடிகராகவும், சிறந்த இயக்குனராகவும் விளங்கினார். 1973, ஜூலை, 20ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.