பெரியார் குறித்த செய்தி எதிரொலி – ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு !

பெரியார் பற்றிய செய்திகளை ரஜினி துக்ளக் விழாவில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட இயக்கங்கள், ரஜினிக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக போலீஸ் நிலையங்களில் ரஜினிக்கு எதிராக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ரஜினி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ரஜினியும் நிலைமை மோசமடைவதை பற்றி தெரிந்தாலும் தன் கருத்தில் எந்த மாற்று கருதும் இல்லையென திட்டவட்டமாக கூறிவருகிறார். இந்த  விவகாரத்தில் தான் இல்லாததை கூறவில்லையென்றும், உண்மையைத்தான் கூறினேன்யென்றும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கூறப்போவதில்லையென கூறிவிட்டார். இதையடுத்து போராட்டக்காரர்கள் எந்நேரமும் போயஸ் கார்டெனிலுள்ள அவரது வீட்டை முற்றுகையிடலாம் என்பதால் அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.