Cine Bits
பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யாராய்க்கு இருவேடங்கள் !
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் மற்றும் பார்த்திபன், ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யாராய், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். பூங்குழலி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தினி கதாபாத்திரத்திலும், நந்தினியின் தாயான ஊமை ராணி மந்தாகினி வேடத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை தாய்லாந்து காடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.