Cine Bits
மலையாளத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாகும் அருவி புகழ் அதிதிபாலன்
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அருவி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அதிதி பாலன். திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை அதிதி பாலன் தற்பொழுது நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படவெட்டு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிவின் பாலி அதிதி பாலன் இணைந்து நடிக்கும் படவெட்டு படத்தை அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்க உள்ளார். நடிகர் சன்னி வேய்ன் தயாரிக்க உள்ளார். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.