ரசிகர்களின் கனவு கன்னியாக நிச்சயம் மாறுவேன் இளம் நடிகையின் லட்சியம் !

அன்னக்கொடி படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமான நடிகை சுபிக்ஷா, தொடர்ந்து கடுகு, நேத்ரா, கோழி சோடா – 2 ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். அனால் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது இவர் நடிப்பில் “யார் இவர்கள்” படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் பற்றி சுபிக்ஷா கூறுகையில், சிறு வேடத்தில் அறிமுகமான நான் பின் முக்கிய வேடங்களில் நடித்து தற்போது நாயகியாக உயர்ந்திருக்கிறேன். நடித்தால் நாயகியாக நடிப்பேன் என பிடிவாதமாக இருந்ததில்லை. அந்த பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இப்படம். விரைவில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறவேண்டும் என்பது தான் என் லட்சியம் என்றார்.