விஜய்சேதுபதியுடன் சேரனின் கம்பேக்!

பிக்பாஸூக்கு பிறகு, திரைத்துறையில் உங்கள் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும்?” என கேட்டார். அப்போது இந்த கேள்வியை ரசித்த கமல்ஹாசன், ‘இது கேள்வியல்ல, வாழ்த்து’ என தனது பாணியில் சொல்லி சிரித்தார். பார்வையாளரின் கேள்விக்கு பதிலளித்த சேரன், “நிச்சயம் எனது ‘கம்பேக்’ ஒரு ‘ஸ்ட்ராங்கான கம்பேக்’ ஆகத்தானிருக்கும். அதற்கான பேச்சுவார்த்தையை முடித்து விட்டுத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்க உள்ளேன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என கூறினார் சேரன்.