விஜய் ஆண்டனி ஜோடியாக இந்துஜா

சாந்தனு நடிப்பில் செந்தில்குமார் இயக்கிய படம், வாய்மை. இதையடுத்து செந்தில்குமார் இயக்கும் படம், காக்கி. காவல்துறையை மையப்படுத்தி உருவாகும் இதில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ரீகாந்த், ஜான் விஜய்  நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, இந்துஜா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.