விஜய் – விஜய் சேதுபதியின் வெறித்தனம் – மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் பயங்கரமாக மோதிக் கொள்வது போன்று போஸ் கொடுத்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கின்றார். இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக கத்துவது போன்று உள்ளது மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர். விஜய் சேதுபதி கழுத்தில் ருத்ராட்சை மாலைகளை அணிந்திருக்கிறார். இருவரும் சட்டை போடாமல் வேறும் உடம்புடன் சண்டையிடும் காட்சியாக உள்ளது இந்த மூன்றாவது லுக் போஸ்டர். மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்கை பார்த்த ரசிகர்கள் சத்தியமாக இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.