ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை
சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. மேலும் நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீ தேவி. பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் துபாயில் ஹோட்டலில் இறந்தார். பாலிவுட் சினிமாவிலும் அவரின் புகழ் பரவியது. நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவ போவதாக மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகும் அவருக்கு கிடைக்கும் இந்த மரியாதையை நினைத்து நான் மிகவும் மனமகிழ்ந்து உள்ளேன் என கூறியுள்ளார்.