Cine Bits
“102 நாட் அவுட்” படம் மே 4ம் தேதி வெளியீடு…

உமேஷ் சுக்லா இயக்கும் “102 நாட் அவுட்” என்ற படத்தை பெஞ்ச்மார்க் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் அமிதாப் பச்சன் 102 வயது முதியவராகவும், அவரது மகனாக 75 வயது முதியவராக ரிஷி கபூரும் நடிக்கின்றனர். இந்த படம் வழக்கமான அப்பா -மகன் கதையாக இல்லாமல் வயது முதிர்ந்த அப்பா-மகன் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் மே 4ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.