12 -ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னரின் வழக்கை வரலாற்றில் நடிக்கும் அக்ஷய்குமார் !

சரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. பாகுபலி, பத்மாவத், மணிகர்ணிகா, சைரா நரசிம்ம ரெட்டி படவரிசையில் தற்போது 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு 'பிருத்விராஜ்' என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் மன்னன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். முதன்முதலாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்கிறேன் என்றும், அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் இந்த படம் வெளியாகும் என்றும் அக்‌ஷய்குமார் தெரிவித்து உள்ளார்.