15 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் – சிம்ரன்!

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகிறது. படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ளதாக கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.