16 வயதினிலே படத்தின் ரீ மேக்கில் நடிக்க ஆசை – விக்ரம் !

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை அக்ஷரா ஹாசன், தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படவிழாவில் விக்ரம் கூறியது, மல் சார் எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். நான் கமலின் தீவிர ரசிகன். 16 வயதினிலே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை. ஆனால், என்னால் அவரை போல் நடிக்க முடியாது. என் ரோல் எனக்கு ரொம்ப பிடித்தது. ஜிப்ரான் திறமையாக இசையமைத்திருக்கிறார். சண்டை காட்சிகள் ஹாலிவுட் படம் போல் இருக்கும். செட் ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் எனக்கு மைல் கல்லாக அமையும் என குறிப்பிட்டார்.