‛2.ஓ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

ஷங்கர் இயக்கிய​ எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.ஓ படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள​ இப்படத்தை ஷங்கர் முன்பை விட இன்னும் பிரமாண்டமாய் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ‛2.ஓ படத்தின் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட்லுக் போஸ்டரை வருகிற நவம்பர் 20-ம் தேதி வெளியிட​ இருப்பதாக​ படக்குழு முடிவுசெய்துள்ளது.