2.0 படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஷங்கர்  இயக்கத்தில், லைகா  நிறுவனம் தயாரிக்கின்ற படம் 2.0. இந்த படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிக்க பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் பணிகள் பரபரப்பாக நடக்கிறது. இந்த படத்தின் ஆடியோவை வெளியிட்டவர்கள் டீஸரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இயக்குனர் தன் டுவிட்டரில் டீஸர் குறித்து தெரிவித்துள்ளார். அதில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில், 2.0 டீஸர் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், கம்ப்யுட்டர் கிராபிக்ஸ்  பணிகள் நிறைய இருப்பதால் அது முடிந்ததும் டீஸர் விரைவில் வெளியாகும் என்றும் பதிவு செய்துள்ளார்.