2019-ஆஸ்கர் விருதுகள் : மூன்று விருதுகளை பெற்றது ”கிரீன் புக்” திரைப்படம்!

ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 2019-ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. சிறந்த படத்துக்கான விருதை கிரீன் புக் தட்டிச்சென்றது. 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. தொகுப்பாளர் இல்லாமல் இந்த விழா நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை. இதில், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை”கிரீன் புக்” திரைப்படம் பெற்றது. பீட்டர் ஃபரோலி இயக்கிய இந்த படம் அமெரிக்கா பியோனோ இசைக்கலைஞர் டான் ஷிரோலியின் வாழ்க்கைய மையப்படுத்திஎடுக்கப்பட்டது. கிரீன் புக் திரைப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் வென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த குறும்படத்துக்கான விருது ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இந்த ஆவண குறும்படம் தயாராகியுள்ளது .ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் படத்திற்காக ரேகா செஹ்டாப்சி, மெலிசா பேர்டன் ஆகியோர் பெற்றனர். இந்த  படம்  கோவையைச்சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான விருது ஃபர்ஸ் மேன் படத்துக்கு வழங்கப்பட்டது. நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்ததை மையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்‌ஷன்  குறும்படத்துக்கான  விருதை ஸ்கின் படம் வென்றது.