2019-ல் அதிகம் விரும்பப்பட்ட பட்டியலில் கவினுக்கு முதலிடம் முகேனுக்கு இரண்டாவது இடம் !

சென்னை டைம்ஸ் நாளிதழ் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி 2019ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட டிவி பிரபலங்கள் (ஆண்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் பிக் பாஸ் 3 பிரபலம் கவின். இது குறித்து கவினிடம் தெரிவித்தபோது விளையாடாதீங்க என்றார். பின்னர், என்னோட காலரை தூக்கிவிட்டுட்டு நான் வீட்ல சென்னை டைம்ஸ் பேப்பரோட நடக்கப் போறேன் என்று தெரிவித்தார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகென் ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் என்பதை விட ரசிகைகள் கிடைத்துள்ளனர். பிக் பாஸ் 3 டைட்டிலை வென்ற முகென் ராவுக்கு சென்னை டைம்ஸ் பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. ரசிகைகளுக்கு முகெனிடம் பிடித்ததே அவரின் இனிமையான குரலும், ஸ்மைலும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. டைம்ஸ் பட்டியலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் 3வது இடத்தை பிடித்துள்ளார். பிக் பாஸ் 3 பிரபலமான தர்ஷனுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. தர்ஷன் டைட்டிலை வெல்லாவிட்டாலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் கமல் ஹாஸனின் தயாரிப்பு நிறுவனத்துடன் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.பெண்களில் லாஸ்லியாவிற்கு கிடைத்துள்ளது.