2020 ஆண்டின் மிகப்பெரிய படம் மாஸ்டர் – ஆண்ட்ரியா !

பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்திற்கான நடிகர் நடிகருக்கான தேர்வுகள் முடிந்து படப்பிடிப்பும் நடந்து வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் கைதி படத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸும் இப்படத்தில் உள்ளார். தற்சமயம் ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இணைந்தது பற்றி ஆண்ட்ரியா கூறுகையில் அதிசயிக்கும் திறமை கொண்ட இயக்குனருடன் 2020 ஆம் ஆண்டின் மிகப்  பெரிய படத்தில் பணியாற்றுவதில் மிகவும் பெருமையடைகிறேன் என கூறியுள்ளார்.