3டியில் தயாராகும் ரஜினியின் 2.ஓ!

இந்தியாவில் தயாராகும் படங்களில் இந்தி படங்களின் பட்ஜெட்தான் மிகப்பெரியது. தமிழ்ப்படங்களின் வட்டம் தென்னிந்தியாவிற்குள்தான் என்றாலும், ஷங்கர் இயக்கத்தில் தமிழில் உருவான எந்திரன் படம்தான் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் எந்திரனை மிஞ்சும் பட்ஜெட்டில் அதாவது 300 கோடியில் தயாரானது. ஆனால் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படம் 350 கோடியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆக, தற்போதைய நிலவரப்படி இந்த படம்தான் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான 3டி படங்களில் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளனர் படக்குழுவினர்.அது மட்டுமின்றி ஆங்கில​ படங்களுக்கு இணையாக​ அமைந்ததுள்ளது என்றும் கூறியுள்ளனர்.