Cine Bits
3 கோடி செலவில் சூர்யாவின் 36 வது படம்….

சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். செல்வராகவன், சூர்யா இணையும் முதல் படம் என்பதால் சென்னையில் ஒரு அரங்கில் 3 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த படத்திற்கு பரபரப்பும், பெரிய எதிர்பார்ப்பும் வலைத்தளங்களில் நிலவி வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து 2ம் கட்ட படப்பிடிப்பு இரவு பகலாக நடைபெறுகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.