360 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் – காப்பான் படவிழாவுக்காக ஆர்யா !

ஆர்யா, பல மாதங்களாகவே ஷூட்டிங் இல்லாத சமயங்களில் நீண்ட தூர சைக்கிளிங் கிளம்பி விடுகிறார். தங்கியிருக்கும் லொகேஷன்களிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் கூட காரைத் தவிர்த்து சைக்கிளிலேயே செல்லும் வழக்கத்தையும் சமீப காலமாக கடைப்பிடிக்கிறார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கும் கூட ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்தது நினைவிருக்கும். இந்நிலையில் சூர்யாவின் ‘காப்பான்’பட ஆடியோ விழாவில் கலந்துகொள்வதற்காக 360 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து வந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சூர்யாவின் ஜோடி ஆர்யாவின் ஒரிஜினல் ஜோடி ஆயிஷா.