50 படங்களில் தான் பேசிய அனைத்து வசனங்களையும் ஒரே படத்தில் பேசிட்டேன் – வினோத்திடம் கூறியுள்ளார் அஜித் !
வினோத் இயக்கியுள்ள பிங்க் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. idhupatri இயக்குநர் வினோத், அஜித்தை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவரிடம் இருந்த தெளிவான மனநிலைதான் எனக்குள் இருந்த எல்லாத் தயக்கங்களையும் உடைத்தது. பிங்க் படத்தின் மையக்கதையை பாதிக்காமல் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் உண்டு. படத்தில் சில சர்ப்ரைஸ் மாறுதல்கள் இருக்கும். படம்பற்றி அஜித் அவர்கள் 50 படங்களில் தான் பேசிய அனைத்து வசனங்களையும் ஒரே படத்தில் பேசிட்டேன் என்று வினோத்திடம் கூறியுள்ளார் அஜித்