Cine Bits
50 படங்களில் நடித்தது பெருமை’’ – காஜல் அகர்வால்
சினிமா வாழ்க்கை குறித்து சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி அளித்த, என்னை வளர்த்த தமிழ், தெலுங்கு பட உலகை சமமாகவே பார்க்கிறேன். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும். நடிகையாக இன்னும் எப்படி மெருகேற்றுவது என்றுதான் யோசிப்பேன். ரசிகர்கள் பாராட்டுவதே முக்கியம். அதற்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கிறேன். உழைக்கிற குணமும், பொறுமையும் இருந்தால் நாம் நினைத்த எல்லாவற்றையும் சாதிக்க முடியும். சினிமா துறையில் திருப்தி என்பது யாருக்கும் இருக்காது. புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். நான் நினைத்த மாதிரி எதிர்பாக்கிற மாதிரி வாய்ப்புகள் வராது. ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும். வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.