Cine Bits
50-வது சர்வதேச திரைப்பட விழா – ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் படங்கள் !

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. இவ்விழாவில் சுமார் 10 ஆயிரம் சினிமா பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.