600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘பாகுபலி-2’

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் மட்டுமே தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

இம்மாதம் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சினிமாவே பார்க்காதவர்கள் கூட இந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் சுமார் 200 கோடிக்கும் மேல் பொருட் செலவில் உருவாகியுள்ளது.