66-வது தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் !

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. தேசிய  விருது வழங்கும் விழா விக்யான் பவனில்  நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் பங்கேற்றார். சிறந்த தமிழ் படமாக 'பாரம்' தேர்வானது. சிறந்த ஹிந்தி படமாக 'அந்தாதுன்' தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநடி' படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாா்.