7ம் அறிவு வில்லனிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார் அருண் விஜய்

ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங்லீ ஆக மிரட்டியவர் ஜானி ட்ரி நியூயன். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது வியட்நாமில் உள்ள அவரிடம் நடிகர் அருண் விஜய் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார். பாக்ஸர் என்ற படத்திற்காக தான் அருண் விஜய் இந்த விஷேச பயிற்சி பெறுகிறார். பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இறுதிசுற்று ரித்திகா சிங் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.