Cine Bits
7 கோடி ரூபாய் செலவில் கேரவன் – அசத்தும் அல்லு அர்ஜுன்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர், நடிகர் அல்லு அர்ஜுன். அவரது நடிப்புக்கும் நடனத்துக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படத்துக்குப் பிறகு, எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார் அல்லு அர்ஜுன். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் சொந்தமாக கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. பிரமாண்ட பொருள்செலவில் தயாரான அந்த கேரவனின் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.