9 வயது சிறுமி அனன்யா பாடல் ஆசிரியையாக அறிமுகமானார்

லண்டனில் வசித்து வரும் அனன்யா ராஜேந்திரகுமார் தமிழில் கொண்ட ஆர்வத்தினாலும், பெற்றோரின் ஊக்கத்தினாலும் தமிழ் எழுத்தாற்றல் மிக்க சிறுமியாகத் திகழ்கின்றார்.தென்னிந்தியாவிலேயே  முதன்முறையாகத் தமிழில் திரைப்படமாகிறது ஷேக்ஸ்பியரின் “மெக்பெத்” என்ற நாடகம். இந்தப் படத்துக்கு 'பகைவனுக்கு அருள்வாய்'  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த 9 வயது சிறுமி அனன்யா – பாடல் ஆசிரியையாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.அனன்யாவின் தமிழ் ஆற்றலை திரையுலகின் மூலம் அறிமுகப்படுத்தும் இத்திரைப்பட இயக்குனர் அனீஸ் பாராட்டுக்குரியவர்.