9 வேடங்களில், ஜெயம் ரவி !

தமிழ் பட உலகில், ‘நவராத்திரி’ படத்தில் முதல் முறையாக 9 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன். அவரை தொடர்ந்து, ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து கமல்ஹாசன், புதிய சாதனையை ஏற்படுத்தினார். இவர்களை அடுத்து ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு, ‘கோமாளி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் படம், பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.