91வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம் துவக்கம்!

91வது ஆஸ்கர் விருது விழா வரும் 24ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த ஆண்டு விழா நடைபெறவிருக்கிறது. ஆஸ்கர் விருது விழாவை இந்தியாவில் உள்ளவர்கள் 25ம் தேதி காலை 6.30 மணியில் இருந்து நேரடியாக பார்க்கலாம்.91வது ஆஸ்கர் விருதுக்கு அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் தி ஃபேவரைட் மற்றும் நெட்பிளிக்ஸின் ரோமா ஆகும். இரண்டுமே தலா 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மாதவிடாய் பற்றி எடுக்கப்பட்ட படம் Period. End of Sentence. மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை பற்றிய படம். மேலும் நிஜமான பேட்மேனான கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சிறப்பான பணியை பற்றி பேசும் இது Documentary short subject பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் முருகானந்தத்திற்காக ஆஸ்கர் விழாவை தமிழர்கள் பார்க்க வேண்டும்.