’96’ படத்திற்கு ‘கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் விருது!

மறைந்த இளம் இயக்குநர் கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் நினைவாக, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வழங்கி வருகின்றனர். இந்த விருது கடந்த 21 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு, இந்த வருடம் ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு வெளியான ‘குட்டி தமிழ்ப் படத்துக்காக ஜானகி விஸ்வநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, 19 வருடங்கள் கழித்து கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் விருது பெறும் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெறுகிறது ’96’ படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.