96’ பட இசையமைப்பாளருக்கு கிடைத்த உயரிய விருது!

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்திருந்தனர். பள்ளிப்பருவ காதலைப் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. இந்த வெற்றிக்கு காரணம் படத்தின் கதை, நடிகர்களின் தனித்துவமான நடிப்பு என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் படத்தின் இசைக்கும் முக்கிய பங்கு இருந்தது. கோவிந்த் வசந்தா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு பெருமைக்குரிய விருதான தாதா சாஹேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.