96 பட இசையமைப்பாளரை அசிங்கமாகத் திட்டிய இளையராஜா!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 96. காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தில் திரிஷா பின்னணி பாடகி ஜானகியின் தீவிர ரசிகையாக நடித்திருப்பார். இதனால், படத்தின் பல காட்சிகளில் நாயகியான த்ரிஷா, இளையராஜா இசையில் ஜானகி பாடல்களை பாடியிருப்பார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி இளையராஜா பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர், '96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது தவறு' எனத் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பேட்டியில், ” ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அந்த இடத்தில் புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான். இது தன்னுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத்தானே உள்ளது. என காட்டமாக இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார்.