Cine Bits
AAA பட பிரச்சனை முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சிம்பு நாடிப்பில் வந்த AAA படம் இன்று காலை காட்சிகளுக்கே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் சில பிரச்சனைகளால் படம் இங்கு வெளியாகவில்லை. இதனால் ரசிகர்களும் அடுத்த காட்சிக்காவது படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ரிலீஸ் பிரச்சனையில் இருக்கும் படத்தை ரிலீஸ் செய்ய சிம்புவே முன்வந்து பிரச்சனையை முடித்து வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் படமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட்டதாக இயக்குனர் ஆதிக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.