Cine Bits
‘AK57’ படத்தை வாங்கிய ஜாஸ் சினிமா
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'AK57' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியாவிலேயே நடத்தது. பல்கேரியாவில் நடைபெற்று வந்த படம்பிடிப்பு இன்றுடன் முடிகிறது.இப்படத்தின் மீதி 20 சதவிகித படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் விரைவில் நடத்த முடிவுசெய்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிடவும், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள இப்படத்தில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.